"சினிமா தாக்கத்தின் மோசமான விளைவு" - ஆசிரியரை அடிக்க கை ஓங்கிய மாணவன் குறித்து அண்ணாமலை!
திருப்பத்தூர்: அரசு பள்ளி ஆசிரியரை, அப்பள்ளியின் மாணவன் ஒருவன், பள்ளி வகுப்பறையிலேயே அடிக்க கை ஓங்கி, மிரட்டியச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில், அறிவியல் ஆசிரியரை, ஆப் பள்ளி மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே அடிக்க கை ஓங்கினான். இந்தக் காணொளி சமூகவலைதளங்களில் கடந்த இரு தினங்களாக வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
"வரக்கூடிய தலைமுறையினரின் குணநலங்கள், பண்புகள் மற்றும் தமிழக அரசு கல்வி நிலையங்களின் அவலநிலைகள்" குறித்து பெரும்பாலோனோர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் வரிசையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இச்சம்பவம் குறித்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்த மாதிரியான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. நம் மாநிலத்தில் இருக்கும் குடிமக்களின் அடுத்த தலைமுறை , அதிகப்படியான சினிமா, உடனடி மனநிறைவு மனப்பான்மை ஆகியவற்றுடன் ஒன்றி வளர்கிறது.
என்று கருத்து பதிவிட்டுள்ளார்.