சட்டப்பேரவை நேரத்தை உதயநிதியை புகழ்வதற்கு செலவிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

Update: 2022-04-29 08:55 GMT

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ'வான  உதயநிதி ஸ்டாலினின் அன்பைப் பெற, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதிக்காக கவிதை வாசித்து புகழ்பாடும் யுக்தியை கையாண்டுள்ளார்.


சட்டபேரவையில் செந்தில்பாலாஜி வாசித்த கவிதை பின்வருமாறு :


பூவை போன்ற எழில் முகம். எப்போதும் நெஞ்சத்து பசுமை காட்டும் பொழில் முகம். தேனினும் இனிய குணம். வானினும் பெரிய மனம். பொல்லாத மனிதர்கள் வீசிடும் விமர்சன முட்கள் கூட பொன்னான உங்கள் முகத்தினால் புட்களாய் மாறி கம்பளம் விரிக்கும். வில்லேந்தி ஆயிரம் பேர் களத்தில் நின்றாலும், இனிமையான சொல்லேந்தி வென்று வரும் எங்கள் சின்னவரே! உள்ளங்களை வெல்வதையே கொள்கையாக கொண்டவரே!


நீங்கள் கலைஞரும் தலைவரும் கலந்தெடுத்த வார்பு. அதனால்தான் தமிழகம் முழுவதும் உங்களின் மேல் ஈர்ப்பு. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை... திருவல்லிக்கேணியின் தங்கப்பிள்ளை... மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை வணங்குகிறேன்.


என்று அழகிய தமிழில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் புகழை பாடினார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவிவகித்த பொழுது, சட்டப்பேரவையில் அ.தி.மு.க அமைச்சர்களும், எம்.எல்.ஏ'க்களும் ஜெயலலிதா அவர்களை புகழ்ந்து பாடிய போது, அப்பொழுது  எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க'வினர் புகுழுரைகளை  கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இப்பொழுது ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது அந்த விமர்சனங்கள் காற்றோடு காற்றாக கலந்துவிட்டது போலும்.

OneIndia

Tags:    

Similar News