கோவிலா? சமாதியா? - ஆர்வக்கோளாறு மிகுதியில் அறநிலையத்துறையின் அட்ராசிட்டி!

Update: 2022-05-04 06:46 GMT

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை நடைபெறுவதால் அத்துறை சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்ற அலங்காரம் அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து தி.மு.க. உடன் பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், 2.21 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கிடையில் கருணாநிதியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் தி.மு.க.வினர் பல்வேறு பூக்களை வைத்து அலங்காரம் செய்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு துறைகள் மீதான மானியக் கோரிக்கையின் விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அதன்படி இன்று கோயில் கோபுரம் போன்ற மாதிரியில் வடிவமைத்துள்ளனர். கடவுள் இல்லை என்று சொல்லி வந்த கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் வடிவமைக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இதனால் உடன் பிறப்புகள் இணையத்தில் என்ன கமெண்ட் போடுவது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர்.

Source, Image Courtey: Dinamalar

Tags:    

Similar News