திராவிட மாடல் சொன்னீங்க.. ஒன்னுமே நிறைவேற்றவில்லை? தி.மு.க அரசை விமர்சித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Update: 2022-05-08 13:29 GMT

ஒரு வருடம் நிறைவு செய்த பின்னரும் தேர்தல் வாக்குறுதி பற்றி தி.மு.க. அரசு வாய் திறப்பதில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை செய்வதற்கு தவறி விட்டனர். பொய்யான வாக்குறுதிகளை சொல்லிவிட்டு மக்களிடம் வாக்குகளை வாங்கிவிட்டனர்.

தற்போது ஒரு வருடம் நிறைவு செய்த பின்னரும் தேர்தல் வாக்குறுதி குறித்து வாய் திறக்காததற்கு மிகப்பெரிய கண்டனத்துக்குரியது ஆகும். அதில் பெண்களுக்கு அளித்த மாதம் ரூ.1000 கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் அது பற்றி வாய் திறக்கவில்லை.

மேலும், திராவிட மாடல் என்று சொல்லும் அவர்கள், பல்வேறு கிராமங்களில் தீண்டாமை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது தனித்தனி மயானங்கள் இருக்கிறது. இதுதான் உங்களின் திராவிட மாடலா? சமத்துவம் இருப்பதாக சொல்லும் உங்களின் சமத்துவம் எங்கே? எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News