கோலார்: தமிழர்கள் கட்டிய ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை!

Update: 2022-05-08 13:32 GMT

கர்நாடக மாநிலம், கோலார் (கே.ஜி.எப்) மாவட்டத்தில் தமிழர்கள் வசிக்கின்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோலார் தங்கவயல் (கே.ஜி.எப்) கர்நாடகாவில் தங்கத் தமிழர்கள் தங்கச் சென்ற தங்கச்சுரங்கம். இங்கே வசிக்கும் சுரங்கத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் இந்த மண்ணுக்காக உழைத்த பூர்வகுடிகளாக வசிப்பவர்கள்.

இங்கு வாழும் தமிழர்கள் மத்தியில், பொதுமேடையில் உரையாற்றியதும், கோலார் பாராளுமன்ற உறுப்பினர் திரு. முனுசாமி அவர்கள் முன்னிலையில் பா.ஜ.க. பேரணியில் கலந்து கொண்டதும், எனக்கு மிகுந்த மன நிறைவு. மேலும், கர்நாடகாவில் கோலார் பகுதியில் வாழும் தமிழர்கள் கட்டிய ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஒரு குடும்பத் திருவிழாவாக குதூகலித்தது. இந்த விழாவில் நமது தமிழ் சொந்தங்களுடன் பங்கேற்றது பெரும் மன நிறைவைத் தந்தது! இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News