தமிழகத்தில் வேகமாக பா.ஜ.க வளர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Update: 2022-05-09 08:56 GMT

உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி, வடமாநில கட்சி பா.ஜ.க என்ற தவறான கருத்து தமிழகத்தில் பரப்பப்பட்டது. அதனையும் தாண்டி கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்துள்ளது என, துக்ளக் இதழின் 52வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

'துக்ளக்' இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து தமிழக அரசு கூறும் கருத்துகள் தவறானவை எனவும், தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த ஓரவஞ்சனையும் செய்யவில்லை. மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் சமுகமான உறவில்லை என்று பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு போதிய அளவில் நிதியுதவி வழங்கப்படவில்லை என்று தி.மு.க. அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதில் குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை என குற்றம்சாட்டுகிறது. அவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை ஆகும். யாருக்கும் ஓரவஞ்சனை செய்யவில்லை.

மேலும், உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமான கட்சி, வடமாநில கட்சி என பா.ஜ.க. மீது தவறான கருத்துக்கள் தமிழகத்தில் பரப்பப்படுகிறது. ஆனால் அதனை எல்லாத்தையும் தாண்டி தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. வளர்ச்சி பெற்றுள்ளது. அதே போன்று கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய மாறுதல்கள் நமது நாட்டில் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் நமது நாடு மிக வேகமாக வளருகிறது. இதனை சர்வதேச நிதி முகமை கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dhinasari

Image Courtesy: Twiter

Tags:    

Similar News