காங்கிரஸ் கட்சியில் ஒரு மானஸ்தன்.. பங்கம் செய்த சி.டி.ஆர். நிர்மல் குமார்!

Update: 2022-05-20 06:08 GMT
காங்கிரஸ் கட்சியில் ஒரு மானஸ்தன்.. பங்கம் செய்த சி.டி.ஆர். நிர்மல் குமார்!

காங்கிரஸ் கட்சியில் ஒரு மானஸ்தன் இருக்கின்றார். ஆனால் உங்க பாஷைல பிழைக்கத் தெரியாத ஆள் என்று தமிழக பா.ஜ.க. ஐ.டி. பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. அரசுக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. ஆனால் அதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தி.மு.க. கூட்டணியில் இனிமேலும் தொடரக்கூடாது என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மதிப்புமிகு தலைவர் அவர்களுக்கு வணக்கம். உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே நான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனது பதவி விலகலை மறிக்காமல் ஏற்றுக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

அமரர் ராஜீவ் காந்தி புகழ் ஓங்குக! நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை குறிப்பிட்டு தமிழக பா.ஜ.க. மாநில ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டர் பதவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒரு மானஸ்தான்... ஆனால் மாணிக்க தாகூர் உங்க பாஷைல பிழைக்கத் தெரியாத ஆள்.. என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News