வரஉள்ள 2024ம் ஆண்டின் மக்களவை தேர்தல் வெற்றிக்கு குஜராத் மாடல் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வதற்காக, தமிழகத்தில் உள்ள 8 பெருங்கோட்டங்களுக்கு (மண்டலம்) ஆக்ஷன் டீம் பொறுப்பாளர்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நியமனம் செய்துள்ளார்.
வருகின்ற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை புதிய வியூகத்தை அமைத்துள்ளார். அதன்படி குஜராத் மாடலில் உள்ளதை போன்று தமிழகத்தில் இருக்கின்ற அனைத்தும் பூத் கமிட்டிகளுக்கும் வாக்காளர் பட்டியல் தயார் செய்து அதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு பொறுப்பாளர் இருப்பார்கள். அவர்கள் இல்லந்தோறும் மோடி, உள்ளந்தோறும் தாமரை என்கின்ற கோஷத்தை முன்னெடுத்து செல்வார்கள்.
மேலும், தமிழகத்தில் 8 பெங்கோட்டங்களாக (மண்டலமாக) பிரித்து ஒவ்வொரு பெருங்கோட்டத்திற்கும் ஒரு பொறுப்பாளர் நியமனம் செய்து, அவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களை சேர்த்து நூறு சதவீதம் பணிகளை மேற்கொள்வார்கள். அதன்படி கொங்கு மண்டலத்திற்கு மாநில பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம், கன்னியாகுமரி பெங்கோட்டத்திற்கு பொதுச்செயலர் பாலகணபதி, சேலத்திற்கு பா.ஜ.க.வின் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், விழுப்புரத்திற்கு வினோஜ் செல்வம், மதுரை கதலி நரசிங்க பெருமாள், திருச்சிக்கு பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம், வேலூர், பொதுச்செயலர் கார்த்திகாயினி, சென்னைக்கு துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar