தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேள்வி எழுப்பினர். அதற்கான பதிலை நிதானமாக அவர் கூறி வந்தார்.
ஒரு மணி நேரம் நடந்த பிரஸ்மீட்டில் யாரையாவது மரியாதை குறைவாக பேசி இருக்கிறோமா, என் கட்சி பற்றி தவறாக பேசினால் தர்மப்படி நானும் பதில் சொல்ல வேண்டும்..!
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 27, 2022
- மாநில தலைவர் திரு.@annamalai_k #KAnnamalai pic.twitter.com/Vmwqm9GuTK
இதற்கு மத்தியில் ஒரு யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அண்ணாமலை பேசும்போது இடையூறு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். அப்போது அதற்கு பதில் அளித்த அவர், நீங்க இதற்காக அறிவாலயத்தில் ரூ.200 வாங்கிக்கொள்வீர்கள் விடுங்கண்ணா என்றார்! அதனையும் தாண்டி மறுபடியும் அந்த யூடியூப் சேனலை சேர்ந்தவர் பேச்சை திசை திருப்ப முயற்சி செய்தார். அப்போது நீங்கள் 200 இல்லை 600, 800, 1500 ரூபாய் வரை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த யூடியூப் சேனலை சேர்ந்தவர், பத்திரிக்கையாளர்களை அவமதித்து விட்டீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கையில், நான் ஒரு மணி நேரம் பிரஸ் மீட் நடத்தியுள்ளேன். எங்கேயாவது பத்திரிக்கையாளர்களை மரியாதை குறைவாக பேசி இருக்கிறோமா, என் கட்சி பற்றி தவறாக பேசினால் தர்மப்படி நானும் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Twitter