'அடிப்போம்! மிதிப்போம்!!' இரவில் அதிகம் சலம்பிய தி.மு.க ஐ.டி.விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா! - காலையில் டெலிட் செய்தார்!

Update: 2022-05-28 08:05 GMT
அடிப்போம்! மிதிப்போம்!! இரவில் அதிகம் சலம்பிய தி.மு.க ஐ.டி.விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா! - காலையில் டெலிட் செய்தார்!

தி.மு.க. ஐ.டி.விங் மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜா, தனது தலைவர் ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்பவர்களை மிதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அக்கட்சியை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளின் குரல்வலையை போலீசார் வைத்து ஒடுக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பலரை சிறையில் தள்ளியது இந்த தி.மு.க. அரசு.

இந்நிலையில், தி.மு.க. ஐ.டி.விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கருத்து சொல்லுங்கள்.. இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள்.. நாகரீகமாக பதில் வரும். ஆனால் என் தலைவன் விமர்சிக்க உங்க எவனுக்கும் தகுதியில்ல. மீறி பேசுனா உங்கப்பனாவே இருந்தாலும் அடிப்போம்.. சாரி மிதிப்போம் என்று பதிவிட்டுள்ளார். ஒரு அரசியல் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்துக்கொண்டு இது போன்ற கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு அப்பார்பட்டவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News