பட்டியலின மக்களை ஏமாற்றுவது தான் 'திராவிட மாடல்' ஆட்சியா? தடா பெரியசாமி அதிரடி!
சமீபத்தில் சென்னையில் 'தலித் உண்மை' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது, பட்டியல் இனத்தை சேர்ந்தோருக்கு அதிக சலுகைகள் கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் தான். அதாவது 2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளித்த தமிழக பா.ஜ.க. மாநில தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர் 'தடா பெரியசாமி' கூறியதாவது: கடந்த 1971ம் ஆண்டு பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாக உயர்த்தியாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், அப்போது இருந்த மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டிய இட ஒதுக்கீட்டை தான் வழங்கப்பட்டது தவி, யாரும், யாருக்காகவும் யாசகம் செய்யவில்லை.
அப்படி வழங்குவதாக இருந்தால் தற்போது வழங்கியிருக்க வேண்டும். தற்போது மக்கள் தொகையில் பட்டியல் இனத்தவர் 24 சதவீதமாக இருக்கின்றனர். ஏற்கனவே உள்ள 18 சதவீத இடஒதுக்கீட்டின் படி, வேலை வாய்ப்பில், பட்டியல் இனத்தவர் 6 சதவீதம் பேர் தான் வேலை வாயப்பு பெற்றுள்ளனர். மீதம் உள்ள 12 சதவீத இடங்களுக்கு சிறப்பு ஏற்பாட்டின்படி ஸ்டாலின் நிரப்புவாரா? இதுதான் உங்க திராவிட மாடல், சமூக நீதியா? ஆட்சியில் இருக்கும் நீங்கள் பட்டியலின மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar