படுகர் இன மக்களைப் பந்தாடும் தி.மு.க - படுகரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பாடுபடும் பா.ஜ.க
தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த கமிட்டி வந்தாலும் யார் முயற்சி செய்தாலும் படுகரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று தி.மு.க. அமைச்சர் ராமச்சந்திரன் சொல்லியிருப்பது வேதனைக்குரிய செய்தி.
படுகர்கள் அனைத்து துறையிலும் முன்னேறி விட்டார்கள். எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இதுபற்றி படுகர்கள் பெருமைப்பட வேண்டுமே தவிர அரசு சலுகைகளை எதிர்பார்க்கக்கூடாது படுகர்கள் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்று அறிவாலயம் தி.மு.க. அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
படுகர் இன மக்களைப் பந்தாடும் திமுக. படுகரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பாடுபடும் பாஜக...!
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 29, 2022
- மாநில தலைவர் திரு.@annamalai_k pic.twitter.com/h9ImcReQ5q
தி.மு.க.வினர் இப்படித்தான் ஜம்மு காஷ்மீரில் ஆர்ட்டிகள் 370 ஐ ரத்து செய்ய முடியாது, முத்தலாக் தடை சட்டம் வரவே வராது இந்தியாவில் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டுவர முடியாது. வடகிழக்கில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது. தாமரை மலராது, அயோத்தி பிரச்சினை தீராது நீட் தேர்வு நடக்காது என்றெல்லாம் ஏகபடியும் பேசிய தி.மு.க.வினர் அதே வரிசையில் சொல்லி இருக்கும் மற்றுமொரு பொய் பகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று பேசியுள்ளார்.
இதுவரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மத்திய, மாநில ஆட்சிப்பொறுப்பில் பலமுறை இருந்தபோதும் ஏன் படுக இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை ஆட்சியில் இருந்த காலங்களில் எல்லாம் படுகர் இன மக்களின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் மறுத்து காலங்காலமாக தி.மு.க. அரசு தடுத்த வந்தது.
தமிழகம் முழுவதும் மாநில அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தவுடன் தன்னுடைய நிலைப்பாட்டை மாட்டிக் கொண்டு மாற்றிக்கொண்டு, வழக்கம்போல மத்திய அரசின் மீது பழியை போட்டு, பா.ஜ.க. இருக்கும் வரை படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இயலாது என்றுதான் தான் தெரிவித்ததாக, மாற்று பேசி நீலகிரி குன்னூர் ஜெகதளா அரசு பள்ளியில் தான் பலர் முன்னிலையில் பேசிய பேச்சினைத் தானே மறுக்கிறார்.