உதயநிதியை அமைச்சராக்கணும் - கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது அரசியல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார்.
அப்பொழுது கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக, 'சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திருச்சி தெற்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.