தி.மு.க பிரமுகர் அபகரித்த நிலத்தை மீட்க வலியுறுத்தி குடும்பமே ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளிப்பு முயற்சி!
சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகியிடம் இழந்த 4,000 சதுரடி நிலத்தை மீட்கப் வலியுறுத்தி ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் பெரும்பாலான இடங்களில் நில அபகரிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அவர்களிடம் இருந்து மீட்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தீக்குளிக்கும் போராட்டம் அடிக்கடி தொடர்ந்து வருகிறது.
தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வரும் இந்த @arivalayam அரசு, மக்களை மறந்து வெகு நாட்கள் ஆகிறது.
— K.Annamalai (@annamalai_k) June 1, 2022
வாராவாரம் இப்படிப்பட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடப்பது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. pic.twitter.com/c6rBVcATq0
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தனது ட்விட்டர் பதிவில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தி.மு.க. நிர்வாகியிடம் இழந்த 4,000 சதுரஅடி நிலத்தை மீட்கப் போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு. விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த தி.மு.க. அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twitter