காங்கிரஸ் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ஹர்திக் படேல்!

Update: 2022-06-02 10:38 GMT

குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சமூகத்திற்காக இட ஒதுக்கீடு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பிரபலமானவர், சில வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று (ஜூன் 2) பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.

குஜராத்தில் கடந்த 2015ம் ஆண்டு பதிதார் எனப்படும் படேல் சமூகத்தினரை இதற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அரசு சலுகைகள் அனைத்தும் வழங்க வேண்டும் என்று நீண்ட போராட்டத்தை முன்னெடுத்தார். இதில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சில ஆண்டுகளில் அவருக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு வெளிப்படையாகவே கூறி வந்தார். இதன் பின்னர் காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து பா.ஜ.க. திட்டங்களை புகழ்ந்து பேசி வந்தார்.

இந்நிலையில், இன்று ஹர்திக் படேல், குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் ரகுநாத் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அப்போது அவருக்கு கட்சி கொடி மற்றும் தொப்பி அணிவித்து பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர் குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News