பொங்கல் பரிசில் தடை செய்யவேண்டிய நிறுவனத்தை கர்ப்பிணி திட்டத்தில் தி.மு.க ஏன் நுழைத்தது - அண்ணாமலை கிடுக்கிப்பிடி கேள்வி

Update: 2022-06-07 13:45 GMT

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த அனிதா டெக்ஸ்கார்ட்ஸ் என்ற கம்பெனிக்கு மறுபடியும் டெண்டர் எடுப்பதற்கான உரிமம் எப்படி வழங்கியுள்ளீர்கள்.

மேலும், தி.மு.க. அமைச்சர் சொல்லியதை போன்று டெண்டர் முடிவடைந்து விட்டது. டெக்னிசியல் பிட் ஓபன் பன்னியாச்சி, பினான்சியல் பிட் இன்றோ அல்லது நாளையோ ஓபன் செய்ய உள்ளனர். ஆனால் மறுபடியும் அதே கம்பெனிக்கு டெண்டரை கொடுக்கின்றீர்கள்.

மேலும், ஆவின் நிறுவனம் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்து பொருட்களை செய்துக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம் அதற்கான லேப் ரிப்போர்ட்டை பாருங்கள் என கூறியுள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு ஏன் தனியார் கம்பெனிக்கு கொடுக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் பால் வழங்கி வருகின்றனர். இது போன்று ஆவின் தரமில்லை என்று சொல்வதால் தமிழக விவசாயிகளை தி.மு.க. அரசு திட்டமிட்டு அவமதிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. எப்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொய் சொல்கின்றார் என்பது தெரியவில்லை. எனவே மறுபடியும் இதில் மாறுபாடு செய்து ஆவினை கர்ப்பிணிப்பெண்களுக்கு வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News