ஆன்லைன் ரம்மி தடையில் தி.மு.க அரசு ஆதாயம் பார்க்கிறது - ஜெயக்குமார் விமர்சனம்!

Update: 2022-06-11 13:46 GMT

ஆன்லைன் ரம்மி தடையில் தி.மு.க. அரசு ஆதாயம் பார்ப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள் தொடர் கதையாவது காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லாததை காட்டுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசியதாவது: ஒரு ஆண்டு விடியா தி.மு.க. அரசின் அவலங்களை தோலுரித்து காட்டும் வகையில் பொதுக்குழு தீர்மானம் இருக்கும். இந்த ஒரு ஆண்டு விடியா ஆட்சியில் மக்கள் துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆடசியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் தி.மு.க. விடியா அரசு ஆன்லைன் ரம்மியால் ஆதாயம் தேடுகிறது. அதாவது வாங்குவதை வாங்கிக்கொண்டு, பெறுவதை பெற்றுக்கொண்டு தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. எனவே கண்துடைப்புக்காக ஒரு குழு அமைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: News J Tamil

Image Courtesy: DT Next

Tags:    

Similar News