உண்மையான சமூகநீதி என்றால் பிரதமர் மோடி மட்டுமே: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

Update: 2022-06-12 03:17 GMT

கிசான் திட்டத்தால் தமிழகத்தில் மட்டும் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருப்பதாக பா.ஜ.க. 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.

மதுரை மேலூர் பேருந்து நிலையம் முன்பாக பா.ஜ.க. 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது: அரசு மானியங்கள் பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைப்பதற்கு ஏற்பாடு செய்தவர் பிரதமர் மோடி. நாடு முழுவதும் தூய்மையாக இருப்பதற்கு பொதுமக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இலவச காஸ் இணைப்பு கொடுத்துள்ளார். 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாதததை 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்துள்ளார். அதே சமயம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கி வருகின்றார்.

இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் சுமார் 46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை ஸ்டாலின் அறிவித்து ஆட்சியை பிடித்து இன்று வரையில் அதனை செயல்படுத்தவில்லை. கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் நகை கடன் தள்ளுபடி என்று சொன்னார். ஆனால் இதுவரையில் அது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் உண்மையான சமூகநீதியின் ஹீரோ பிரதமர் மோடி மட்டுமே. விரைவில் ஏழைகளே இல்லாத நாடாக மாற்றிக்காட்டுவார். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: Twitter

Tags:    

Similar News