குடியரசுத் தலைவர் வேட்பாளராக கிறிஸ்தவரை நிறுத்துங்கள் - கிருஸ்துவத்திற்கு விசுவாசம் காட்டும் திருமாவளவன்!

Update: 2022-06-14 10:16 GMT

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்வரும் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை. இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறிஸ்தவ மக்களுக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. தற்போதைய மோடி அமைச்சரவையில் கிறிஸ்தவர் எவரும் இடம்பெறாத நிலை இருந்தது. அதைப் பலரும் சுட்டிக் காட்டிய பிறகு அண்மையில் நடைபெற்ற விரிவாக்கத்தின் போது தான் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சட்டமன்றங்களிலும் போதுமான பிரதிநிதித்துவம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அவர்களது மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் கோவா, கேரளா, போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட வாய்ப்பு கிடைப்பதில்லை.

தற்போதைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.2, கிறிஸ்தவர் உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் 4 சதவீதம் மட்டுமே உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த யாரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Source: Twitter

Image Courtesy: Vikatan

Tags:    

Similar News