அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும்: முறைகேடு வழக்கில் சிக்கிய காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் ஸ்டாலின்!
நேஷனல் ஹெரால்ட் நாளிதழ் பத்திரிகை வழக்கில் ராகுல், சோனியா காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல்காந்தி எம்.பி., ஆஜரானார். அதே சமயம் சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக ஆஜராகாமல் உள்ளார்.
ராகுல்காந்தியிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று நாடு முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல், சோனியா மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி, காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது ஆளும் பா.ஜ.க. அரசியல் பழிவாங்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பொதுமக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க இது போன்று வேறு விதமாக திசை திருப்புகிறது. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
Source, Image Courtesy: Vikatan