இந்து மன்னர்களின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள பா.ஜ.க திட்டம் - ராஜராஜ சோழன் பெயரில் விருது!

Update: 2022-06-17 05:30 GMT

சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் பற்றிய வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட எளிதால் வெற்றி பெற்ற பா.ஜ.க.வால் தமிழகத்தில் குறிப்பிட்ட வெற்றியை பெற முடியவில்லை. அதாவது தி.மு.க.வின் மொழி அரசியல், திராவிட இன அரசிலைத் தாண்டி பா.ஜ.க.வினால் ஒரு வலுவான கட்சியாக மாற முடியவில்லை.

தமிழகத்தில் பா.ஜ.க. என்பது வடஇந்திய கட்சி, இந்தி ஆதரவு என்று தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது. இதற்கிடையில் 1998ம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும் 1999ல் தி.மு.க.வுடனும் அமைந்த கூட்டணியால் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கான கதவுகளை திறந்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே தமிழ் மொழி, பண்பாட்டுக்கு எதிரான கட்சி பா.ஜ.க. என்கின்ற தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறியடிக்க என்ன செய்யலாம் என்பது பற்றி பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இது குறித்து பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் பேசுகையில், தி.மு.க. பொறுத்தமட்டில் என்னதான் நாத்திகம் பேசினாலும் தமிழகத்தில் இன்று வரையிலும் அடையாளமாக ஏராளமான கோயில்கள் உள்ளது. இக்கோயிலை கட்டியவர்கள் சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள்தான். ஆனால் இந்த மன்னர்களை மறைத்து தமிழகத்தின் அடையாளங்களாக காட்டாமல் ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்டவர்களை தமிழகத்தின் அடையாளங்களையே மாற்றுவதற்கு தி.மு.க. முயற்சி செய்கிறது.

மேலும் தஞ்சை பெரிய கோயிலான, சிவன் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு எதிராகவும் இப்போது, தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். இதனால்தான் தமிழகத்தின் அடையாளமாக சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களை மக்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: The Economics டைம்ஸ் 

Tags:    

Similar News