தி.மு.க பயிற்சி பாசறை கூட்டம் - பரோட்டாவிற்காக பாக்ஸிங் செய்த தி.மு.க.வினர்!

Update: 2022-06-19 13:02 GMT

சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பயிற்சி பாசறை கூட்டத்திற்கு பின்னர் உணவுக்காக தி.மு.க. நிர்வாகிகள் நிர்வாகிகள் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தி.மு.க. சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்காக திராவிட மாடல் என்ற பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான இளம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராசா பங்கேற்று தி.மு.க. நிர்வாகிகளிடம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு பின்பு உணவு வழங்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட உணவு வந்திருந்த பாதி பேருக்கு மட்டுமே சரியாக இருந்தது. மீதம் உள்ளவர்களுக்கு உணவு தயாரிக்க தாமதம் ஆனது.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் உணவு தயாரிக்கும் இடத்திற்கே சென்று புரோட்டா மாஸ்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை பிரித்து கொள்வதில் தி.மு.க. நிர்வாகிகளுக்கிடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்ததால் உணவுகள் கீழே கொட்டப்பட்டு வீணாகியது.

இதனிடையே நிர்வாகிகள் பலரும் தாங்கள் அணிந்திருந்த அடையாள அட்டையை ஆங்காங்கே வீசி எறிந்தனர். இதனால் அங்கிருந்த மற்ற தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்து மூளையில் நின்று வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வினர் ஓட்டல்களில் சண்டை போடுகின்றனர் அல்லது கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் சமையல் செய்பவர்களிடம் சண்டையிடுகின்றனர். இவர்கள் எப்போதும் உணவிற்காக சண்டையிடுவது தொடர்கதையாக உள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News