'மரம் சாய்ந்து வங்கி மேலாளர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது' - அண்ணாமலை!

Update: 2022-06-25 09:45 GMT

சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காகப் பள்ளம் தோண்டியதில் மரம் சாய்ந்து, அந்த வழியாக வந்த காரில் விழுந்ததில் வங்கி பெண் மேலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை போரூரை அடுத்த மங்கலம் நகரை சேர்ந்தவர் வாணி கபிலன் 57, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே நேற்று மாலை பணி முடிந்தவுடன் தனது காரில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கார் பி.டி.ராஜன் சாலை வழியாக கர்நாடக பேங்க் அருகே வந்தபோது திடீரென்று அங்கிருந்த மரம் வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்தது. இதில் கார் அப்பளம் போன்று நொறுங்கியதில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டிருந்த வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியபோது மரத்தை வெட்டி அகற்றி இருக்க வேண்டும் அல்லது போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மழை நீர் வடிகால் பணிக்காகப் பள்ளம் தோண்டியதில் மரம் சாய்ந்து, அந்த வழியாக வந்த காரில் விழுந்ததில் வங்கி மேலாளராகப் பணி புரியும் 52 வயது சகோதரி உடல் நசுங்கிப் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News