ஏழை பாதிரியாரின் சிறுமிக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., சரஸ்வதி!
கும்பகோணத்தை சேர்ந்த ஏழை பாதிரியார் ஒருவரின் மகளுக்கு கருப்பை நீர்க்கட்டிக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொடுத்திருக்கிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரஸ்வதி.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பாதிரியார். இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வரும் நிலையில், அவருக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார். அவருக்கு கருப்பையில் நீர்க்கட்டி இருந்ததால் அவருக்கு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அப்போது சிறுமியின் பாதிரியாருக்கு ஈரோட்டில் சி.கே.மருத்துவமனை உள்ளது. அங்கு சென்றால் சிறுமியை குணப்படுத்துவார்கள் என்று கூறியுள்ளனர்.
A girl aged 20 of a poor priest from Kumbakonam was ctitical with large ovarian cyst.Local dr refferred her to CK Hospital Erode. A mother with the white coat @drcksaraswathi made sure right treatment to her & not a penny charged. The girl is doing well now!!!@annamalai_k
— Rajasekar Jayaraj 🇮🇳 (@rajasekarj) June 25, 2022
🙏🙏🙏 pic.twitter.com/YXT29I0btZ
இதனையடுத்து அந்த பாதிரியார் தனது மகளை அழைத்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள சி.கே. மருத்துவமனையை நாடினார். அப்போது அவரது சிறுமிக்கு ஒரு வெள்ளை அங்கியுடன் ஒரு தாய் சிகிச்சை அளித்துள்ளார். இதற்காக ஒரு பைசா கூட வாங்காமல் மருத்துவம் பார்த்துள்ளார். அவர்தான் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர் சரஸ்வதி ஆவார். அவரின் இச்செயலுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Twitter