முத்தமிழறிஞரை மூலையில் தூக்கி போட்டுவிட்டு, 'சின்னவர்' படத்தை வைத்த தஞ்சை மேயரின் விசுவாசம்

Update: 2022-06-28 11:01 GMT

தஞ்சாவூரில் மேயர் தனது அறையில் உதயநிதி ஸ்டாலின் படத்தை முன் வைத்து மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி படத்தை தூக்கி ஓரமாக வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்த உதயநிதி ஸ்டாலினை மேயர் ராமநாதன் வரவேற்றார், பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக வாங்கப்பட்ட 66 லட்சம் மதிப்புள்ள சாலையோர மண் சுத்தம் செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தை உதயநிதி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் மேயர் உதயநிதியை தனது அழைத்துக் கொண்டு தனது அலுவலகம் சென்றார், அப்போது தூய்மைப் பணியாளருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் உதயநிதி உள்ளிட்ட பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படத்தின் பின்னணியில் மேயர் இருக்கையின் மேல் முதல்வர் ஸ்டாலின் படம், உதயநிதி படமும் மட்டுமே இருந்தது மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி படம் ஒரு மூலையில் சிறிய மாலை அணிவிக்கப்பட்டு யாரும் பார்க்கக்கூடாது என்ற நிலையில் இருந்தது. இதனால் உணர்வுள்ள தி.மு.க நிர்வாகிகள் பலரும் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முதல்வர் படம் ஓ.கே, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி படம் ஓ.கே ஆனால் மந்திரியும் இல்லாத எம்.எல்.ஏ'க்களில் ஒருவராக இருக்கும் உதயநிதி படம் வைத்துவிட்டு. மு.கருணாநிதி படத்தை தெரியாதபடி மறைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Source - Dinamalar

Similar News