ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். அப்போது மேடையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று தனதுக்கு ஆதரவு கோரி வருகின்றார். அந்த வகையில் தற்போது தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள திரவுபதி முர்முவுக்கு பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரவுபதி முர்மு மதியம் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றார். அவரை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், பா.ஜ.க. பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் அவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி கோரினார். அதனை முடித்துக்கொண்டு புதுச்சேரியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான சந்திப்புகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. அப்போது பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை திரவுபதி முர்மு கேட்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar