அழிவின் விளிம்பில் உள்ள கட்சிகளை கேலி செய்யாதீர்: பிரதமர் மோடி!

Update: 2022-07-04 13:33 GMT

நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று கட்சியினரிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க.வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் நடைபெற்றது. ஐதராபாத் சர்வதேச மாநாடு மையத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் 19 மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடி ஐதராபாத்தில் தங்கி மாநாட்டில் கலந்து கொண்டார். அதன்படி முதல் நாள் கூட்டத்தில் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை பார்த்து கேளி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளை பார்த்து அதில் இருந்து பாடம் கற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twitter

Tags:    

Similar News