கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - காளி சர்ச்சை குறித்து குஷ்பு கோபம்

Update: 2022-07-05 13:59 GMT

லீனா மணிமேகலை வெளியிட்ட காளி போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்று இருந்தது இந்துக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது. அவர் மீது பல ஊர்களில் வழக்குகளும் பதியப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காளி படம் தவறுதலாக வெளியிடப்பட்ட போஸ்டரால் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று லீனாவிற்கு நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பு கடுமையான கண்டனங்களை கூறியுள்ளார். லீனா நடித்து இயக்கி வரும் டாக்குமென்டரி படம் காளி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். காளி வேடம் அணிந்த ஒரு பெண் புகைப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றவை சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் புனிதமாக வணங்கி வரும் காளி தெய்வத்தை இழிவுப்படுத்துவதாக கூறி கடுமையான எதிர்ப்புகள் கிளப்பி வருகிறது. உடனடியாக அரெஸ்ட் லீனா மணிமேகலை என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இவர் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் புகார்கள் குவிந்து வருகிறது.

இது பற்றி நடிகையும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான குஷ்பு கூறியதாவது: படைப்பாற்றவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே போன்று படைப்பாளிகள் கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கலவரத்தை ஏற்படுத்துவதாக அமையும். வன்மையான கண்டனங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News