திரவுபதி முர்முவை பத்தி யாரும் வாயை திறக்க கூடாது - தி.மு.க'வினருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் தடை, ஏன்?
பா.ஜ.க. கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை விமர்சிக்க கூடாது என்று தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தடை போட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஜூலை 18ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பாக பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். ஆனால் சமூக நீதி என்று பேசும் தி.மு.க. தலைமை ஒரு பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்காமல் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதனால் சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை பேசும் தி.மு.க. தலைமை தற்போது பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல், உயர் ஜாதி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து வருகிறது. இதனை ஊடகங்களும் தி.மு.க. மீது கடுமையாக விமர்சனம் செய்கிறது.
இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறும்போது, ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதியாகியுள்ளது. எனவே ஏதாவது பிரச்னை என்றால் கோரிக்கை வைக்க அவரைதான் பார்க்க வேண்டும். எனவே அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சின்ஹாவை ஆதரித்து பேசுங்கம், அதே சமயம் திரவுபதி முர்முவை விமர்சனம் செய்யக்கூடாது என்ற உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar