இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெரியதல்ல - ஆதங்கத்தில் விடுதலை சிறுத்தைகள்

Update: 2022-07-07 06:04 GMT
இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெரியதல்ல - ஆதங்கத்தில் விடுதலை சிறுத்தைகள்

தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நேற்றைய ராசய்யா எனும் இன்றைய இளையராஜா, இப்போது நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா எம்.பி.யாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Full View

இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இளையராஜா அவர்களின் இசைத்திறன் விலை மதிப்பற்றது. இதை பல இசை மேதைகளே கூறியுள்ளனர்.

அவருடைய இசைக்கு ஒரு நியமன எம்.பி. பதவியை நிர்ணயித்திருப்பது அவரை பெருமைப்படுத்துவதை விட அவரது இசையில் பெருமைப்படுத்துவது என்றுதான் நான் கருதுகிறேன். இதனால் அவருக்கு புதிதாக எந்த ஒரு பெருமையும் வந்துவிடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Thanthi Tv

Image Courtesy: The Economics Times

Tags:    

Similar News