இந்துக் கடவுள் காளி குறித்து அவதூறுராக பேசிய மஹுவா மொய்த்ராவை கைது செய்ய களத்தில் இறங்கி பா.ஜ.க. போராட்டம்!

Update: 2022-07-07 06:21 GMT

இந்துக் கடவுள் காளி பற்றி அவதூறாக கருத்து கூறிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. போராட்டத்தில் இறங்கியுள்ளது. கனடாவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலை என்பவர் ஆவணப் பட இயக்குனராக உள்ளார். இவர் தற்போது காளி என்ற பெயரில் ஆவணப் படம் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அதில் காளி வேடத்தில் சிகரெட் புகைப்பது போன்று ஒரு பெண் உள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அப்படத்தை தடை செய்யவும், லீனா மணிமேகலையை உடனடியாக கைது செய்யவும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., மஹுவா மொய்த்ரா காளி புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார். அதாவது காளியை மாமிசம் உண்ணும், சாராயத்தை ஏற்கின்ற கடவுளாகவே பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது பற்றி மேற்கு வங்க பா.ஜ.க. மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது: இந்துக் கடவுளை அவமதிப்பதை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கிறதா என்பதை தெரிவுபடுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் மதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.

தற்போது இந்து மதக் கடவுள் பற்றி அவதூறாக கருத்து கூறிய தனது கட்சி எம்.பி., மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. வருகின்ற 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News