ஷிண்டே எபெக்ட் - உதயநிதிக்கு அமைச்சர் பதவியை தள்ளிப்போட்ட தி.மு.க

Update: 2022-07-08 07:20 GMT

தி.மு.க.வில் வருங்காலங்களில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய முடிவுகள் எடுப்பார் என்பதால் அவருக்கு உடன்பிறப்புகள் ஐஸ் வைக்கின்றனர். அவரை அமைச்சராக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தீர்மானம் போட்டு வருகின்றனர்.

அதன்படி ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் உதயநிதியை அமைச்சராக்குவது என தி.மு.க.வும் முடிவு செய்துள்ளது. ஐதராபாத்தில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாரிசு அரசியல் கட்சிகளின் ஆட்சியை அகற்றுவோம் தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்போம் என்று சபதம் செய்தனர்.

மேலும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே வாரிசு அரசியலை ஊக்குவித்ததால் ஏக்நாத் ஷிண்டே அதிர்ச்சியாளராக கிளம்பினார். தமிழகத்திலும் தி.மு.க. வாரிசு அரசியலை கண்டித்து தமிழகத்திலும் ஷிண்டேக்கள் புறப்படுவார்கள் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார். இதனால் தி.மு.க.வில் கலக்கம் அடைந்துள்ளனர்.

அதாவது மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் தி.மு.க.வுக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் நிர்வாகிகளும், தலைமையும் உள்ளது. இப்போதைக்கு உதயநிதியை அமைச்சராக்கும் முடிவை தள்ளி வைப்போம். 2024 லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு இது பற்றி யோசிக்கலாம் என கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News