மாற்றுதிறனாளிகளை கேவலமாக நடத்தும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் - குவியும் கண்டனங்கள்
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் அரசியல்வாதிகள் பொது மக்களின் கால்களிலும் கைகளிலும் விழுந்து வாக்குகளை சேகரித்து வெற்றி பெற்றுவிட்டனர். அதன் பின்னர் பொதுமக்களை மதிக்காமல் செல்வதை அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை தரையில் அமர வைத்து மிகவும் கேவலமாக நடத்தும் முறை அரங்கேறியுள்ளது.
அதே சமயம் அமைச்சரின் உடன்பிறப்புகள் நாற்காலியில் அமரவைத்துள்ளார். மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை நாற்காலியில் அமர வைத்து அவரின் கோரிக்கைகளை பணிவுடன் கேட்டிருக்கலாம். அதை விட்டு அமைச்சர் நாசர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தரையில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து கொடுமை செய்துள்ளார். அது மட்டுமின்றி அவர்களிடம் சரியாக பேசாமல் அவமரியாதையும் செய்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்றவர்கள் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.