" இஸ்லாமிய மாணவிகளுக்கு பள்ளி நேரத்தில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் " - அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தி.மு.க நிர்வாகி கடிதம்!

Update: 2022-07-08 11:12 GMT

ஈரோடு: அரசுப்  பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள்,  தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க, பள்ளி தலைமை ஆசிரியருக்கு தி.மு.க நிர்வாகி எழுதிய கடிதம், இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  


"தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என்றும், பிற மத நம்பிக்கைகள் மீது கரிசனம் காட்டி வருகிறது." என்றும்   இந்து மத இயக்கங்கள் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு, தி.மு.க நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.பி சந்திரசேகர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், "மாநகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் அதிக அளவு படிக்கின்றனர்.  இந்த மாணவிகளுக்கு மதியம் 10 நிமிடம் தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.




 

இக் கடிதம் இணையத்தில் வைரலாக பரவியது. பல இந்து அமைப்புகள்  தி.மு.க நிர்வாகியின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதன் விளைவாக  சந்திரசேகர் தான் அனுப்பிய கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் திரும்பப் பெற்றுக் கொண்டார்.


Tags:    

Similar News