"பள்ளிகளில் கந்தசஷ்டி சொல்ல நேரம் வேண்டும்!"- பள்ளிகளில் தொழுகைக்கு நேரம் கேட்ட தி.மு.க'விற்கு போட்டியாக இந்துமுன்னணி!

Update: 2022-07-08 11:45 GMT

"இந்து  மாணவிகளின்  நலனுக்காக, பள்ளியில் தினசரி 15 நிமிடம் கந்த சஷ்டி கவசம் சொல்ல நேரம் ஒதுக்க வேண்டும்" என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


அரசு  பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள்  தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க, பள்ளி தலைமை ஆசிரியருக்கு தி.மு.க நிர்வாகி எழுதிய கடிதம், இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு, தி.மு.க நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.பி சந்திரசேகர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், "மாநகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் அதிக அளவு படிக்கின்றனர். இந்த மாணவிகளுக்கு மதியம் 10 நிமிடம் தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.


இந்நிலையில் இந்து முன்னணி சார்பில்  விடுக்கப்பட்ட கோரிக்கையில் "இஸ்லாமியர்களின் அடிவருடி தி.மு.க கவுன்சிலர் திரு சந்திரசேகரன், ஈரோடு கருங்கல்பாளையம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு பள்ளி நேரத்தில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டுமென,  கடிதம் மூலம் பள்ளி தலைமையாசிரியருக்கு  அழுத்தம் கொடுத்ததாக வந்த தகவலையடுத்து,  இந்து மாணவிகள் நலனுக்காக பள்ளி நேரத்தில் தினசரி 15 நிமிடம் கந்தசஷ்டிகவசம் மற்றும் ஹயக்ரீவர் மந்திரம் சொல்ல அனுமதிக்க வேண்டும்" என்று  இந்து முன்னணி கோரிக்கை மனு அளித்துள்ளது.


 

Tags:    

Similar News