முதல்வரை சந்திக்க முயன்ற மாற்றுத்திறனாளி பெண்! பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் வேதனை!

Update: 2022-07-11 14:21 GMT

திருவண்ணாமலை: முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முயன்ற மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த சில தினங்களாக மாநிலத்திற்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகளை  தொடங்கிட செல்லும் முதல்வருக்கு பிரம்மாண்ட அரங்கம், சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் பொதுமக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளிப்பது என அந்தந்த பகுதி  தி.மு.க'வினர் தீவிரமாக  இறங்கி வேலை செய்து வருகின்றனர்.


ஊடகங்களில், முதல்வர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெறுவது போன்ற காட்சிகள் அமைக்கப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் வேறு என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறி வருகின்றனர்.


சமீபத்தில் திருவண்ணாமலை  சென்ற முதல்வர் ஸ்டாலினை, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சந்திக்க முயன்றுள்ளார். அப்போது முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் திரும்பி வந்துவிட்டார்.

இச்சம்பவம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Full View




Tags:    

Similar News