போலி பாஸ்போர்ட் வழக்கில் அதிகாரிகளை நீக்க வேண்டும் - ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்!

Update: 2022-07-13 06:01 GMT

தேச பாதுகாப்பிற்கு பாதிப்பை உண்டாக்கும் போலி பாஸ்போர்ட் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் அகதிகளாக முகாமில் வசித்து வருகின்றனர். அது போன்று இருப்பவர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். அது போன்றவர்கள் இந்தியாவின் ரகசியங்களை வெளிநாடுகளுக்கு சொல்லிவிடும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே இது போன்று போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் கும்பல்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு சில அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு போலி பாஸ்போர்ட் வழங்குவதற்கு உறுதுணையாகவும் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தேச பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போலி பாஸ்போர்ட் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News