"அப்பாவி மக்களை எப்படி மதம் மாற்றினார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் படம் 'நிலை மறந்தவன்' - ஹெச் ராஜா அதிரடி!

Update: 2022-07-14 13:05 GMT

"பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் படம், 'நிலை மறந்தவன்'. இதனை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும்" என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் ராஜா கூறியுள்ளார்.


2020'ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான படம் 'ட்ரான்ஸ்'. இப்படம் மலையாள திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நடித்த இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. சட்டவிரோத மதமாற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம், மலையாள அரசியல் மற்றும் சமூகத்தில் பேசுபொருளானது.


இந்நிலையில், 'ட்ரான்ஸ்' திரைப்படத்தை தமிழாக்கம் செய்து, 'நிலை மறந்தவன்' என்ற தலைப்பில், நாளை (ஜூலை 15) தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.


இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் ராஜா, தாமரை செய்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் "மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்ட படம் 'ட்ரான்ஸ்'. தமிழில் 'நிலை மறந்தவன்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டு, ஜூலை 15ஆம் தேதி வெளியாகிறது. நாம் அனைவரும் இத் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மதத்தை பகடைக்காயாக பயன்படுத்தி எப்படி அப்பாவி மக்களை மதம் மாற்றினார்கள் போன்ற உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும் படம் இது.


எந்த ஒரு மதத்தையோ தெய்வத்தையோ விமர்சிக்காத ஒரு படம். அதனால்தான் கேரளாவில் மிகப் பெரிய வெற்றியை கண்டது. தமிழக மக்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று இத்திரைப்படத்தை காண கேட்டுக்கொள்கிறேன்.

என்று பேசியுள்ளார்.


Full View


Tags:    

Similar News