எது தாழ்ந்த ஜாதி'ன்னு கேட்குறதுதான் திராவிட மாடலா? - எஸ்.ஜி.சூர்யா

Update: 2022-07-15 10:54 GMT

தி.மு.க., நடத்தும் திராவிட மாடல் அரசாங்கத்தின் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டிருப்பது பற்றி தமிழக பா.ஜ.க., மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., வரலாறு பாடத்தின் 2வது செமஸ்டர் தேர்வு நடைபெற்றுள்ளது. அதில் கேட்கப்பட்ட கேள்வி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் தாழ்ந்த சாதி எது என்றும், அதற்காக நான்கு பதில்களும் அளிக்கப்பட்டது. இந்த கேள்வியால் மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பற்றிய கேள்வித்தாள்கள் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த செயலுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அ.தி.மு.க., சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தி.மு.க., நடத்தும் திராவிட மாடல் அரசாங்கத்தின் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வில் தாழ்த்தப்பட்ட கேள்வி உள்ளது. அதில் 4 விருப்பங்களையும் கொடுத்துள்ளார். தி.மு.க.வின் போலி சமூகநீதிக் கூற்றுக்களால் கடவுள்கூட திகைத்து நிற்கிறார்கள். மேலும், அவர்களின் பொய்கள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகின்றன. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News