ஈ.வெ.ரா ஜாதியை ஒழித்தவராம். அதனாலதான் அவர் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்த அவலமோ?- ஹெச் ராஜா விளாசல்!

Update: 2022-07-15 11:51 GMT

சேலம்: பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரியார் பல்கலைக்கழகம் சார்பில், முதுகலை வரலாறு பாடப் பிரிவுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடந்தது. அத் தேர்வில் "தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி வினாத்தாளில் இடம்பெற்றுள்ளது.




 


அவ் வினாத்தாளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. "சமூக நீதி மண்,பெரியார் மண் என்று வாய்கிழிய பேசும் திராவிட ஸ்டாக்குகள், பெரியார் பல்கலைக்கழக தேர்வில் நடந்த இச்சம்பவத்திற்கு  என்ன பதில் சொல்வார்கள்?" என்று கேள்விகளால் தி.மு.க மற்றும் தி.க ஆதரவாளர்களை நெட்டிசன்கள்  வறுத்தெடுத்து வருகின்றனர்.


இச்சம்பவம் பெரிதானதைத்தொடர்ந்து, "தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை, பிற பல்கலைகழகம்/ கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டது. இது குறித்து என் கவனத்துக்கு வரவில்லை,உரிய விசாரணை நடத்தப்படும்" என்று பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய வினாத்தாளை வடிவமைத்தது யார்? என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு துணைவேந்தர் உத்தரவும் பிறிப்பித்துள்ளார்.

News 7 Tweet


அதுமட்டுமில்லாமல், இப்பிரச்சனை குறித்து விசாரிக்க உயர் அலுவலர் அடங்கிய குழு ஒன்றை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.


இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் ராஜா, இப்பிரச்சினை குறித்து பதிவிட்ட ட்விட்டர் பதிவில் : ஆஹா. ஈ.வெ.ரா ஜாதியை ஒழித்தவராம். அதனாலதான் அவர் பெயரில் உள்ள பல்கலை கழகத்தில் இந்த அவலமோ? உயர்கல்வித்துறை அமைச்சரே மாண்புமிகு மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்றதன் காரணம் ஜாதிவெறியா என்ற சந்தேகம் உறுதியாகி விட்டது.

H Raja Tweet


Tags:    

Similar News