மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த தி.மு.க., அமைச்சர் பொன்முடி! என்ன தெரியுமா?
தமிழகத்தில் உள்ள கே.வி., மற்றும் சைனிக் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் தமிழ் பாடம் கற்பிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், சி.பி.எஸ்.யின் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமாவதால் மாணவர்களின் உயர்கல்வி பாதிப்படைந்துள்ளது. எனவே தேர்வு முடிவை விரைந்து மத்திய அரசு வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் தமிழ் பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும். என் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நடைமுறைப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar