ஒன்றியமல்ல இந்தியா என்ற வாசகத்துடன் சென்ற அர்ஜூன் சம்பத் வாகனத்திற்கு தடை - தி.மு.க அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Update: 2022-07-16 13:22 GMT

ஒன்றியமல்ல இந்தியா என்ற வாசகத்துடன் சென்ற இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத்தின் வாகனத்தை தி.மு.க., அரசு தடை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத், சுதந்திர இந்தியா 75 யாத்திரையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தை தயார் செய்திருந்தார். அந்த வாகனத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றுவோம், சுதந்திர போராட்ட நினைவிடங்களில் வீர வணக்கம் செலுத்துவோம். ஒன்றியமல்ல இந்தியா! திராவிடமல்ல தேசியமே!! வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!! என்று குறிப்பிட்டிருந்தது. இந்த வாகனம் வேலூர் மாவட்டத்திற்கு சென்றபோது போலீசார் தடை செய்தனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அண்ணன் அவருடைய 'சுதந்திர இந்தியா 75' யாத்திரையை வேலூரில் காவல்துறை தடை செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த வாகனத்தில் இருந்த 'ஒன்றியமல்ல இந்தியா' என்ற வாசகத்தை மறைக்க முயற்சி செய்வது வேதனையிலும் வேதனை! இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News