மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் பாரபட்சம் இல்லாத நடவடிக்கை - களத்தில் இறங்கிய பா.ஜ.க

Update: 2022-07-17 04:34 GMT

கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


மேலும், மாணவியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே மாணவியின் சடலத்தை பெற்றுக்கொள்வோம் என்று கூறிவிட்டனர். இதனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அதே போன்று பா.ஜ.க., சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க., இளைஞர் அணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஆட்சியர் சுரேஷிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க., இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க., நிர்வாகிகள் இணைந்து துணை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், இறந்த குழந்தை ஸ்ரீமதியின் பினக்கூராய்வு அறிக்கையை வைத்து, பாரபச்சம் இல்லாத நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆணை ஆட்சியர் எஸ்.சுரேஷ் அவர்களிடம் பா.ஜ.க., இளைஞர் அணி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ம் சார்பாக மனு வழங்கப்பட்டது. இவ்வாறு ரமேஷ் சிவா ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News