பாஸ்போர்ட் ஊழல் - ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை, அடுத்து என்ன?

Update: 2022-07-17 07:53 GMT

தமிழக பாஸ்போர்ட் ஊழல் பற்றி வரும் 21ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆதாரங்களுடன் சந்திக்க இருப்பதாக பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதிகுட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில், 'நமக்காக நம்ம எம்.எல்.ஏ., திட்டம்' சார்பாக மக்கள் குறை தீர்க்கும் நடமாடுகின்ற சேவை வாகனத்தை பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஜூலை 16) தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனத்தில் சமர்பிக்கலாம். இந்த பிரச்சனைக்கு பா.ஜ.க., நிர்வாகிகள் உதவி செய்வார்கள்.

மேலும், தமிழகத்தில் பாஸ்போர்ட் ஊழல் பற்றி இரண்டாம் அறிக்கையை வருகின்ற 21ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனுவாக அளிக்க இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரையில் ஒரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏராளமான பாஸ்போர்ட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் மதுரையில் மையமாக வைத்து செயல்பட்டுள்ளனர். தேச பாதுகாப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் விளையாடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News