ஹிந்தி படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் உதயநிதி! "இந்தி தெரியாது போடா" கும்பல் அதிர்ச்சி!
பாலிவுட் நடிகர் அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் டப்பிங்கை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா தற்போது உதயநிதி ஸ்டாலினின் நிறுவனமான 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனத்தின் கீழ் கட்டுப்பட்டுள்ளதாக, தி.மு.க எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வரும் நிலையில், அதற்கேற்றார்போல் முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட பெரும்பாலான படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில், ஹிந்தி நடிகர் அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் டப்பிங்கை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.
'லால் சிங் சத்தா' ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. அதே நாளில் தமிழ்நாட்டில் நடிகர் விக்ரமின் 'கோப்ரா' திரைப்படமும் வெளியாகிறது. அந்த கோப்ரா படத்தையும் தமிழகத்தில் விநியோகம் செய்வது அதே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தி திணிப்பை எதிர்ப்போம்!,"வட இந்தியா ஆதிக்கம்" போன்ற தீவிர பிரச்சாரங்களை முன்வைத்து அரசியல் செய்தவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் அமரர் கருணாநிதி. அவரது பேரனும் திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு இந்திப் படத்தை தமிழ் மொழியில் டப் செய்து தமிழகத்தில் வினியோகம் செய்கிறார், என்ற செய்தி தி.மு.க ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து, 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்து, இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள், தற்போது உதயநிதி ஸ்டாலினின் முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.