இலங்கை அதிபர் கோத்தபய இந்தியா வருவதை சாதுர்யமாக தடுத்து நிறுத்திய அண்ணாமலை
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து தனது உயிரை காப்பாற்றுவதற்காக மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு தப்பியோடினார். அவர் இந்தியாவுக்குதான் தப்பி வருவதற்கு முயற்சி செய்தார். அதனை தடுத்தது யார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்னையில் பிற இயக்கங்களை விட, சமீபகாலமாக தமிழக பா.ஜ.க., மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. பல்வேறு மறைமுகமான வேலைகளை செய்து வருகிறது. போராட்டங்கள் நடந்த சமயத்தில்கூட தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை இலங்கை சென்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு சென்ற அண்ணாமலை தமிழக மக்களை சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தார். தமிழக பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாற்றினார். மேலும், இலங்கையில் தான் சந்தித்த நபர்கள், அவர்களின் கருத்துக்கள், தமிழர் நலனுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று நீண்ட அறிக்கை ஒன்றை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பினார்.
இந்தியா தப்பி வர இருந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தி தடுத்தது பாஜக மாநிலத் தலைவர் @annamalai_k தான்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 18, 2022
- தினமலர் நாளேடு pic.twitter.com/4vrWqYpb0M
இந்நிலையில், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இலங்கையில் தலைமறைவான வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
அவரை தொடர்ந்து அவரது சகோதரர் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அவரது அலுவலகத்தை மக்கள் சிறைப்பிடிக்க வருவதை அறிந்த அவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். அங்கிருந்து மாலத்தீவுக்கு சென்று சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தார். அவர் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுவதற்கு திட்டமிட்ட கோத்தபய முடிவு செய்திருந்தார். அவர் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தவர். இலங்கையில் அதிபர் பொறுப்பேற்கும் முன்னரே அதை ரத்து செய்தார்.