ஸ்டாலின் மீதான வெறுப்பால் தி.மு.க.வை உடைக்க எம்.பி., செந்தில்குமார் முடிவா?
தருமபுரி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் முதலமைச்சர் ஸ்டாலின் மீதான வெறுப்பால் கட்சியை உடைப்பதற்கு முடிவு செய்திருப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நேற்று (ஜூலை 18) காலை கோட்டை மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்து உரிமை பிரசாரம் கடந்த ஜூன் 28ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் துவங்கியது. இப்பயணம் வருகின்ற 31ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்துக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அதனை மீட்டெடுப்பதற்காக இந்துக்கள் ஒற்றுமை மற்றும் எழுச்சி உருவாக்க வேண்டும் எனவும் இப்பயணம் நடந்து வருகிறது.
மேலும், வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் திருப்பூர், கோவை பகுதிகளில் அதிகமாக உள்ளனர். தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதியில் நக்சலைட் நடமாட்டம் இருக்கிறது. எனவே இப்பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வரும் என்பதால் தமிழக உளவுத்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். அதே போன்று உளவுத்துறை செயல்பாடும் சரியில்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எங்களின் நீண்டகால கோரிக்கையாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயிலை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும். இந்துக்களுக்கு என்று வாரியம் அமைத்து கோயிலை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தருமபுரி தி.மு.க., எம்.பி., செந்தில்குமாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீது ஏதோ வெறுப்பு உள்ளதால் கட்சியை உடைக்க முடிவு செய்துவிட்டார். இந்து முறைப்படி பூஜை செய்யக்கூடாது என்று கூறிய எம்.பி.யின் கருத்துக்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy: Twitter