போலி பாஸ்போர்ட் விவகாரம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு!

Update: 2022-07-21 10:47 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை சந்தித்து போலி பாஸ்போர்ட் பற்றிய புகார் மனுவை அளித்தார். அது மட்டுமின்றி தமிழகத்தில் சமீபகாலமாக நடந்து வரும் வன்முறை சம்பவம் குறித்தும் விவாதித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது பா.ஜ.க., பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணை தலைவர்கள் துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், முன்னாள் மேயர் கார்த்திகாயினி மற்றும் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இந்நிலையில், ஆளுநர் சந்திப்பின்போது மதுரையில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு படையினரின் சோதனை பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும், போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரித்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும். இதற்கு தமிக அரசு தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News