டெண்டர் முறைகேடு - டெல்லி துணை முதலமைச்சரை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு!

Update: 2022-07-22 11:16 GMT

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுபான ஆயத்தீர்வை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு டெண்டர் முறைகேடு நடத்திருப்பதாக சி.பி.ஐ., விசாரணை செய்வதற்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி அரசு கடந்த 2021ம் ஆண்டு ஆயத்தீர்வை சட்டத்தில் புதிய திருத்தம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி மதுபான தயாரிப்பாளர்கள், மதுபானம் விற்பது தொடர்பான லைசென்ஸ் மது வாங்கும்போது டெண்டர், மதுக்கடைகள் திறப்பதற்கு அனுமதி உள்ளிட்டவைகளின் மூலமாக பலர் கோடிக்கணக்கில் லாபம் அடைந்திருக்கின்றனர் என்று பா.ஜ.க., புகார் கூறியிருந்தது.

இதனை விசாரணை செய்த துணை நிலை ஆளுநர் வினய்குமார் சாக்சேனா சி.பி.ஐ., விசாரணை செய்வதற்கு பரிந்துரை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஆயத்தீர்வை கவனித்து வரும் துணை முதலமைச்சர் சிசோடியா விசாரணை வளையத்திற்குள் விரைவில் கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஆம்ஆத்மி அரசுக்கும் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News