'கொடுங்கோல் ஆட்சி செய்த ஆஷ்துரையை தூக்கப்பிடிப்பதா? தியாகிகளை அவமதிக்கும் தி.மு.க அரசு' - அர்ஜுன் சம்பத் கொந்தளிப்பு
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.வசந்தகுமார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள ஆஷ் நினைவகத்தை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் புனரமைப்பு செய்வதை நிறுத்திட வேண்டியும், அந்நினைவகத்தை அப்புறப்படுத்தி அவ்விடத்தில் வ.உ.சி.யின் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் கம்பெனியின் அருங்காட்சியகத்தை அமைத்திட வேண்டியும்,
வணக்கம்,
தூத்துக்குடி மாவட்டம் இந்திய தேசிய விடுதலைபோரின் மிக முக்கிய தலைவர்களை கொடுத்த பெறுமைக்குரிய மாவட்டம். தேச விடுதலைக்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை கண்ட இந்த தூத்துக்குடி மாநகர் பீச்ரோட்டில், பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்ட ஆஷ்துரையின் நினைவகத்தை, மக்களின் வரிப்பணத்தை கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் புனரமைப்பு செய்வது நாட்டையும், நாட்டு மக்களையும், சுதந்திர போராட்டத்தையும், சுதந்திர போராட்ட வீரர்களையும் அவமதிக்கும் செயலாகும். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் புனரமைப்பு பணிகளை விடுத்து, ஆஷ் நினைவகத்தை அகற்றிட வேண்டுகிறோம். இது குறித்து நாங்கள் கடந்த 09.05.2022 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, மாறாக புனரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.
நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் ஆங்கிலேயரிடம் ஏகாதிபத்திற்கு எதிராக தேசப்பற்றோடு விடுதலைக்காக போராடிய எண்ணற்ற வீரர்களின் தியாகத்தையும், வரலாற்றையும் தெரியப்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு, நம் அரசு தேசப்பற்றை வளர்த்திட, பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்ட அடிமைசின்னமான ஆஷ்துரையின் நினைவகத்தை அப்புறப்படுத்தி அவ்விடத்தில் சுதேச தாகத்தை மக்களிடையே ஏற்படுத்த வ.உ.சி.யால் துவங்கப்பட்ட சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் கம்பெனியின் அருங்காட்சியகத்தை அமைத்திட வேண்டி, இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு சமர்ப்பிக்கின்றோம். ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: Hindu Makkal Katchi
Image Courtesy: